Free PDF Download - Nava Graha Kolgal Thuthi




நவக்க கோள்கள் துதி



சூரியன்


சீலமாய் வாழ சீர் அருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயியே போற்றி
சூரிய போற்றி, சுதந்திரா போற்றி
வீரிய போற்றி, வினைகள் களைவாய்

சந்திரன்


எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி

செவ்வாய்


சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகானே அவதிகள் நீக்கு

புதன்


இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தருள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்மா போற்றி

வியாழன்


குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
க்ரஹதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்

வெள்ளி


சுக்கிர மூர்த்தி சுபமிகு யீவாய்
வக்கிர மின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே

சனி


சங்கடந் தீர்ப்பாய் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா

ராகு


அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கன்னியே ரம்மியா போற்றி

கேது


கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி



Related blogs - Way of living: